சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் சூப்பர் ஸ்நாக்ஸ்...!! - Seithipunal
Seithipunal


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உருளைகிழங்கை வைத்து சூப்பரான லாலிபாப் ரெசிபி.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 6

வெங்காயம் - 1
பிரெட் தூள் - 5 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 5 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில், இடித்து வைத்த இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

அத்துடன், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

பிறகு, கரம் மசாலா, தனியா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

பின்னர், சிறிய துண்டுகளாக எடுத்து பெரிய நெல்லிக்காய் அளவில் உருட்டிக் கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து சோள மாவில் முக்கி எடுத்து பிறகு, பிரெட் தூளில் உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்துவைத்த உருளைக்கிழங்கு உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இறுதியாக, ஒவ்வொரு உருண்டைகளிலும் குச்சி சொறுகினால், சுவையான உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Potato recipe


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->