எளிதில் செய்யலாம் ருசியான உருளை கிழங்கு கைமா..!
potato keema recipe in tamil
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு - 4
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 1
மஞ்சள் தூள், மிளகாய் தூள் - தே. அளவு
மல்லி தூள் - தே. அளவு
கரமசாலா - தே.அளவு
மிளகு தூள், எண்ணெய் - தே.அளவு
கடுகு, உளுந்து, கடலை பருப்பு, உப்பு - தே. அளவு
கருவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது
கொத்த மல்லி பொதினா இலை
தேவையனா தண்ணீர்

செய்முறை :
உருளை கிழங்கை வேகவைத்து எடுத்து தேலை சுத்தம் செய்து பின் அதை பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் காடயை வைக்கவும். பின் காடயில் எண்ணை உற்றவும்.
பின் நாம் எடுத்து கொண்டு உள்ள பொருள்களை சேர்க்கவும் முதலில் கடுகு உளுத்து கடலை பருப்பு சேர்க்கவும் அது பொறிந்த உடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் கருவேப்பிலை சேர்க்கவும். அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். வனங்கிய பின் தக்களியை சேர்க்கவும், அதன் பின் உருளை கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறவும்.
பின் அதில் நாம் வைத்து இருக்கும் மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள், கரமாசலா தூள் சேர்த்து கிளறவும். பின் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்பு பத்து நிமிடம் முடிடவும். பின் அதை கொத்த மல்லி பொதினா போட்டு இறக்கவும்.
English Summary
potato keema recipe in tamil