மழை நேரத்திற்கு இதமான, காரசார மிளகு காளான் சாதம்!! செய்வது எப்படி?!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

காளான் - 250 கிராம் 
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1 
மிளகு - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு.

mashroom rice, seithipunal

செய்முறை :

காளானை நன்கு பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கழுவி கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர் பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வதக்கவும். 

பின்னர் அதனுடன் மல்லித்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டவும். பின், காளான் உப்பு சேர்த்து வதக்கவும். பின் இதனுடன் மிளகு தூளை சேர்த்து தீயை குறைத்து கிளறி வதக்கி விடவும்.

பின் அதனுடன் சாதத்தை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறினால் காரமான காளான் மிளகு சாதம் ரெடி!! 

English Summary

pepper mashroom rice


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal