சுவையான ''பட்டாணி கட்லெட்'' ஒரு முறை இப்படி செய்து பாருங்க..! - Seithipunal
Seithipunal



சுவையான பட்டாணி கட்லெட் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
பட்டாணி 
பச்சை மிளகாய் 
பெரிய வெங்காயம் 
இஞ்சி பூண்டு விழுது 
மைதா 
பிரட் 
கொத்தமல்லி 
புதினா 
எண்ணெய் 
உப்பு 

செய்முறை: 
முதலில் பட்டாணியை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் மிக்ஸி ஜாரில் பிரட் துண்டுகளை போட்டு நன்றாக பொடிப் பொடியாக அரைத்து கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பட்டாணி, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி பிசைந்து வைத்துள்ள மாவை வடை போல் தட்டி மைதா மாவில் நனைத்து பிறகு பொடி செய்துள்ள பிரட்டில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தட்டி வைத்துள்ள வடையை போட்டு பொன்னிறமாக வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பட்டாணி கட்லெட் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pattani Cutlet recipe in tamil


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->