மென்மையும் இனிப்பும் கலந்த பால் ஹல்வா! ஒருமுறை சாப்பிட்டால் மறக்க முடியாத ருசி...!
PAAL ALWA RECIPE
பால் அல்வா
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பால் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 6
ஏலக்காய் - 2
நெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
முந்திரியை உடைத்துக் கொள்ளவும். ஏலக்காய் வாயில் தட்டுப்படாமல் இருப்பதற்கு சர்க்கரையை ஏலக்காய் விதையுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்ட காயும் வரை கிளறவும்.சிறிய பேனில் நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பால் ஓரளவு திரண்டதும் சர்க்கரை மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை சேர்த்து சுண்ட காய்ச்சவும்.பாலானது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை அணைத்து நன்கு கிளறி விடும் போது இன்னும் கெட்டியான பதத்திற்கு வரும்.மிகவும் சுவையான பால் அல்வா ரெடி.