வெங்காயத்தாள் பருப்பு பொரியல்...நாவை விட்டு ருசி போகாது... - Seithipunal
Seithipunal


வெங்காயத்தாள் பருப்பு பொரியல் 
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
வெங்காயத்தாள்  - ஒரு கட்டு
பாசிபருப்பு  - கால் கப்
பச்சை மிளகாய்  - 2
மஞ்சள் தூள்  - 1 டீஸ்பூன் 
உப்பு  - தேவைக்கேற்ப
வெங்காயம்  - 13
தாளிக்க:
கடுகு             - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை    - ஒரு கொத்து
எண்ணெய்         - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில்,வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பாசிபருப்பை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். பின், ஒன்றோடொன்று கலந்ததும் இறக்கவும். இப்போது சுவையான வெங்காயத்தாள் பருப்பு பொரியல் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதத்துடன் சேர்த்து இந்த பொரியல் சாப்பிட நன்றாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Onion leaf dal poriyal taste will not leave your tongue


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->