ஒரு துண்டு போதாது! சினிமா ஸ்டார்களும் செஃப்களும் விரும்பும் இனிப்பு...! -நியூயார்க் சீஸ்கேக் மீண்டும் பேசுபொருள் 
                                    
                                    
                                   One slice not enough dessert loved by movie stars and chefs New York cheesecake talk town again
 
                                 
                               
                                
                                      
                                            நியூயார்க் சீஸ்கேக் (New York Cheesecake)
நியூயார்க் சீஸ்கேக் என்பது க்ரீமி, மென்மையான, திகட்டாத இனிப்பு சுவையுடன் கூடிய ஒரு குளிர்ந்த டெசர்ட் ஆகும். இதில் முக்கியமாக கிரீம் சீஸ், சவர்கிரீம், மற்றும் பிஸ்கட் பேஸ் சேர்க்கப்படுவதால் இதன் சுவை உலகம் முழுவதும் பிரபலமானது.
தேவையான பொருட்கள்:
பேஸ் (Base) தயாரிக்க:
டைஜெஸ்டிவ் பிஸ்கட் – 200 கிராம்
வெண்ணெய் (கரைத்தது) – 100 கிராம்
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
சீஸ்கேக் கலவைக்கு:
கிரீம் சீஸ் – 500 கிராம்
சர்க்கரை – 1 கப்
சவர்கிரீம் (Sour Cream) – 1 கப்
முட்டை – 3
வனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
மைதா (அல்லது கார்ன் பிளவர்) – 1 டேபிள்ஸ்பூன்

தயாரிக்கும் முறை:
பேஸ் தயாரித்தல்:
டைஜெஸ்டிவ் பிஸ்கட்டை மிக்ஸியில் நன்கு பொடியாக அரைக்கவும்.
அதில் கரைத்த வெண்ணெய், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை ஒரு ஸ்ப்ரிங் ஃபார்ம் பேன் (அல்லது கேக் டின்) அடிப்பகுதியில் நன்றாக அழுத்தி பரப்பவும்.
10 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து கடினமாக ஆக்கவும்.
சீஸ்கேக் கலவை:
ஒரு பெரிய பௌலில் கிரீம் சீஸ் மற்றும் சர்க்கரையை சேர்த்து மென்மையாக அடிக்கவும்.
பின்னர் முட்டை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து அடிக்கவும்.
சவர்கிரீம், வனிலா எசன்ஸ், மைதா சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை குளிர்ந்த பிஸ்கட் பேஸ் மீது ஊற்றவும்.
பேக் செய்வது:
ஓவனைக் 160°C வரை முன்பே சூடாக்கவும்.
சீஸ்கேக் கலவையுடன் டினை ஒரு பெரிய தட்டில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி “water bath method” பாணியில் வைக்கவும் (இதனால் சீஸ்கேக் உலராது).
50–60 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
நடுவில் சிறிது ஜெல்லி போல அசைவாக இருந்தால் சரியானது.
பின், ஓவனில் கதவை திறக்காமல் 1 மணி நேரம் குளிர விடவும்.
பிறகு, குறைந்தது 6–8 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும்.
                                     
                                 
                   
                       English Summary
                       One slice not enough dessert loved by movie stars and chefs New York cheesecake talk town again