பித்த வெடிப்பு நீங்க,மருக்கள் உதிர,கருவளையம் மறைய விளக்கெண்ணெய் ஒன்று போதும்...!
One drop of castor oil is enough to cure gallstones remove warts and make dark circles disappear
பித்த வெடிப்பு நீங்க:
பாதத்தில் உள்ள (பித்த வெடிப்பு) வெடிப்பு நீங்க ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் பன்னீர், இரண்டு ஸ்பூன் எலுமிச்சம் சாறு மூன்றையும் கலந்து வெந்நீரில் கால்களை 10 நிமிடங்கள் வைத்து ஊறிய பின் பூசிவர வெடிப்பு நீங்கும்.
கருவளையம் மறைய:
விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவி வந்தால் கருவளையம் காணாமல் போகும்.

மருக்கள் உதிர:
1 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.
புண் குணமாக:
புதுச்செருப்புகள் காலைக் கடித்து, புண்ணாகிவிட்டால், அந்த இடத்தில் ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) தடவினால் குணமாகிவிடும்.
புருவ முடி வளர:
விளக்கெண்ணெயை விரலால் தொட்டுக் கொள்ளவும்.பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும்.பின்பு 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.அதன் பின் ஈரமான துணியால் புருவங்களைத் துடைத்து எடுக்கவும்.இந்த செயலை தினமும் ஒரு முறை செய்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
English Summary
One drop of castor oil is enough to cure gallstones remove warts and make dark circles disappear