சத்து நிறைந்த 'நண்டு ரசம்' எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்.!
Nandu Rasam recipe in tamil
ஆரோக்கியம் நிறைந்த சுவையான நண்டு ரசம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடல் நண்டு
மிளகு
பூண்டு
சீரகம்
மிளகாய்த்தூள்
கருவேப்பிலை
தக்காளி
சின்ன வெங்காயம்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லி
செய்முறை:
முதலில் நண்டை உடைத்து புளி கரைச்சலில் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் கருவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். பின்னர் சின்ன வெங்காயம், பூண்டை இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் நண்டு, தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர், புளி கரைச்சல் சேர்க்கவும். ரசம் பொங்கி வரும் போது மல்லி இலை தூவி இறக்கினால் அவ்வளவுதான் சுவையான நண்டு ரசம் தயார்.
English Summary
Nandu Rasam recipe in tamil