சமையலுக்கு மட்டுமல்ல..சரும பராமரிக்கவும் உதவும் கடுகு எண்ணெய்..!
mustard Oil Helps Skin care
கடுகு எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதை போலவே அழகை பராமரிக்கவும் கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம். எப்படி பயன்படுத்தலாம் என பார்போம்.
சருமத்திற்கு:
கடுகு எண்ணெய் சருமத்தை இயற்கையாக சுத்தம் செய்யும் கிளின்சராக கருதப்படுகிறது. கடுகு எண்ணெயுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து குளிப்பதற்கு முன் மசாஜ் செய்து குளித்து வர சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
உதடுகளுக்கு:
உதடு கருமையாக இருந்தால் காலையில் குளிக்க செல்வதற்கு முன் 10 நிமிடம் இரவு தூங்குவதற்கு முன் கடுகு எண்ணெயை தடவி வர உதட்டின் கருமை நீங்கும்.
கூந்தலுக்கு:
கடுகு எண்ணெய் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர முடி உதிர்த்தலை கட்டுப்படுத்தி அடர்த்தியான முடியை வளரவைக்க உதவும். இளநரை உள்ளவர்கள் கடுகு எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல பலனை தரும்
பற்களுக்கு:
காலை எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்கடுகு எண்ணெயை வாயில் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து கொப்பளிப்பதால் வாய் துர்நாற்றம், ஈருகளில் ரத்த கசிவு, பற்களில் உண்டாகும் நோய் தொற்றுகள் சரிசெய்யும்.
English Summary
mustard Oil Helps Skin care