காரம் சுல்லுன்னு... சூப்பரா பெப்பர் சிக்கன் சால்னா பண்ணலாமா...!
Lets make a spicy chicken saalna
பெப்பர் சிக்கன் சால்னா
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு
சிக்கன் அரை - கிலோ
முட்டை - 4
சின்ன வெங்காயம் - 15
இஞ்சி பூண்டு விழுது - 6 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுதூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணைய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை :
முதலில்,சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை வேக வைத்து மஞ்சள் கருவை நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.பிறகு,தனியா, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
அதன் பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து சிக்கனையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.சிக்கனும், மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும் வெட்டி வைத்த முட்டையைச் சேர்த்துக் கிளறவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்
English Summary
Lets make a spicy chicken saalna