முடி உதிர்வு, முடி வறட்சியை தவிர்க்க வேண்டுமா? கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்துங்கள்..!
karunjeeragam oil For Hair care
தற்போதுள்ள நவீன சூழல், உணவு பழக்க வழக்கங்கள், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் முடி உதிர்தல் ஏற்படுகிறது. இளம்பெண்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடி உதிர்தல் தவிர்க்க விரும்புவர். செயற்கை பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டிலிருக்கும் கருஞ்சீரகத்தை வைத்து எப்படி சரிசெய்வது என பார்போம்.
கருஞ்சீரகம் – 100 கிராம்,
வெந்தயம் – 100 கிராம்,
தேங்காய் எண்ணெய் – 150 மில்லி

கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியுடன் தேங்காய் எண்ணெயில் கொட்டி கலக்கி கொள்ளவும். அடுப்பில் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரில் வைத்து கொதிக்கவைக்க வேண்டும். நன்றாக கொதித்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி 3 முதல் 4 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். அதன் பின் இந்த எண்ணெயை தினம் பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெயை முடியின் வேர்கால்களில்படும்படி மசாஜ் செய்து முடியை அலசி வர முடி உதிர்தல், முடி வெடிப்பு , முடி வறட்சி போன்றவை சரிசெய்ய உதவும்.
English Summary
karunjeeragam oil For Hair care