பெண்களை மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் சட்னி..! - Seithipunal
Seithipunal


தினமும் பெண்கள் எள் சம்பந்தமான உணவுகள் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் இருக்கும். இதனைப்போன்று, வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான புரதசத்து அதிகளவில் இருக்கிறது. சுவையான மற்றும் உடலுக்கு சத்தான வேர்க்கடலை எள்ளு சட்னி எப்படி செய்வது என இன்று காணலாம். 

வேர்க்கடலை எள்ளு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

எள்ளு  - 2 கரண்டி (லேசாக வறுத்தது),
வறுத்த வேர்க்கடலை - அரை கிண்ணம்,
காய்ந்த மிளகாய் - மூன்று (வறுத்தது),
தேங்காய் துருவல் - 2  கரண்டி,
புளி - சிறு துண்டு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - ஒரு கரண்டி,
கடுகு - கால் கரண்டி,
கறிவேப்பில்லை - சிறிதளவு.

வேர்க்கடலை எள்ளு சட்னி செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட எள்ளு, வேர்க்கடலை, வறுத்த மிளகாய், தேங்காய் துருவல், புளி மற்றும் உப்பு ஆகியவற்றை மிக்சி அல்லது அம்மியில் சட்னி பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர், வானெலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த கலவையை சேர்த்து கிளறி பரிமாற வேண்டும். 

இதனை சாதத்திற்கும், தயிர் சாதம் போன்ற உணவுகளுக்கும், இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கும் சேர்த்து சாப்பிடலாம். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Prepare Verkadalai Satny to Avoid Breast cancer Health Tips 19 June 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->