இனிப்பான ரசகுல்லா இனி வீட்டிலேயும் செய்யலாம்..!
how to prepare rasagulla
தேவையான பொருட்கள் :
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - அரை கிலோ
மைதா - 25 கிராம்
எலுமிச்சை சாறு - தே. அளவு
ரோஸ் எசன்ஸ் - இரண்டு சொட்டு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, நன்றாகக் கொதி வரும்போது தேவையான அளவு எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கவும். பால் திரிய ஆரம்பிக்கும். நன்றாகத் திரியும் வரை அடுப்பில் வைக்கவும்.
பிறகு, திரிந்த பாலை ஒரு மெல்லிய துணியில் கொட்டி, வடிகட்டவும். துணியின் மேல் சேர்ந்துள்ள திரிந்த பாலை நன்றாகப் பிழிந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மைதா மாவைக் கலந்து நன்றாக தேய்த்து பிசையவும்.
இதை சிறு உருண்டைகளாக உருட்டும்போது ஒரு தட்டில் மைதா மாவை சிறிது தூவி, அதன் மேல் உருண்டைகளை வைக்கவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் அரை கிலோ சர்க்கரை போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கொதித்து ஜிராப் பதத்திற்கு வரும் போது தயாரித்து வைத்த உருண்டைகளை அதில் மெதுவாக ஒவ்வொன்றாக போட்டு பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
உருண்டைகள் வெந்து பந்து போல வெண்மையாக இருக்கும். இப்போது இறக்கி ஆற வைத்து ரோஸ் எசன்ஸ் சேர்த்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து எடுத்தால் சுவையான ரசகுல்லா தயார்.