சுவையான முப்பருப்புப் பாயாசம்.! செய்வது எப்படி.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - 100 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 200 கிராம்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - 3
பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்.
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சரிசியை சுமார் அரை மணி நேரம் ஊறவைத்து அத்துடன் ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவலை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுத்து வைக்கவும்.

பருப்புகளை அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர்விட்டு குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி வைக்கவும். 

பிறகு வேகவைத்த பருப்புக் கலவையை அடுப்பில் வைத்து தேங்காய் - அரிசிக் கலவை மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி சுமார் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

அதன் பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து இறக்கி லேசாக பால் விட்டு இறக்கினால் சுவையான முப்பருப்புப் பாயாசம் தயார்.!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare mupparuppu payasam


கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
Seithipunal