சுவையான பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி?
how to make pottu kadalai murukku
சுவையான பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி?
மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஈஸியான பத்து நிமிடத்தில் பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
அரிசி மாவு, பொட்டுக்கடலை, கருப்பு எள், மிளகாய் தூள், பெருங்காயம், உப்பு, வெண்ணெய், எண்ணெய்.
செய்முறை:-
முதலில் பொட்டுகடலையை பொடியாக அரைத்து அதனை சலித்து கொள்ள வேண்டும். அதில் அரிசி மாவு, கருப்பு எள், மிளகாய் தூள், பெருங்காயம், உப்பு, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
பின்னர் வெதுவெதுப்பான நீர் சேர்த்து முறுக்குக்கு ஏற்ற பதத்தில் பிசைந்து அதனை அச்சில் போட்டு முறுக்கு பிழிந்து அதை சூடான எண்ணெயில் மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான பொட்டுக்கடலை முறுக்கு தயார்.
English Summary
how to make pottu kadalai murukku