பனங்கிழங்கு பாயாசமா? - வாங்க பார்க்கலாம்.!
how to make panangkizhangu payasam
கிழங்கு வகைகளில் ஒன்றான பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும். இப்படிப்பட்ட இந்த பனங்கிழங்கில் மிகவும் சுவையான வித்தியாசமான ஒரு பாயாசம் செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
பனங்கிழங்கு
தேங்காய்ப்பால்
பனை வெல்லக் கரைசல்
ஏலக்காய்த்தூள்
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை
நெய்

செய்முறை:-
முதலில் பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உள்ளே உள்ள குருத்து பகுதியை நீக்கி விட்டு மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து அடுப்பில் ஒரு வாணலை வைத்து நெய்யை ஊற்றி சூடானதும், பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடி பிடிக்காமல் வதக்க வேண்டும், அதன்பிறகு பனை வெல்லக் கரைசல் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கவும்.
பின்னர் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறினால், சுவையான பனங்கிழங்கு பாயசம் தயார்.
English Summary
how to make panangkizhangu payasam