மணமணக்கும் மசாலா மோர் செய்வது எப்படி?
how to make masala mor
மசாலா மோர் எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
தயிர்
கொத்தமல்லி
கறிவேப்பிலை
சீரகம்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
பெருங்காயத்தூள்
உப்பு
செய்முறை:-
முதலில் தயிரை தண்ணீர் மற்றும் உப்பு கலந்து மோர் ஆக்க வேண்டும். அதில் பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு மிக்சி ஜாரில் சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அரைத்து அதனை எடுத்து வைத்துள்ள மோரில் கலக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மசாலா மோர் தயார்.