கார சாரமான கறி கஞ்சி எப்படி செய்வது?
how to make kari kanji
தேவையான பொருட்கள்:-
பாஸ்மதி அரிசி, பாசிப்பருப்பு, கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பெரிய வெங்காயம், தக்காளி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேங்காய் பால், ஆட்டு இறைச்சி, சீரகத்தூள், சோம்பு தூள், தனியா தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பட்டை கிராம்பு, ஏலக்காய், நெய்.
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி பாசிப்பருப்பு, மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகள், மஞ்சள் தூள், வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிட்டு இறக்கி விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் கழுவிய கறியுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், சோம்பு தூள், தனியா தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.
கறி நன்கு வெந்ததும் அதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிகட்டி ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதே போல் வேக வைத்த அரிசி கலவையும் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்த இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து கரண்டியால் நன்கு கலந்து தேங்காய்ப்பால், கறி அவித்த தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து உப்பு போட்டு நன்கு கலந்து கஞ்சி பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைத்து கொள்ளவும்.
ஒரு வானலில் நெய்யை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து தயார் செய்து வைத்துள்ள கலவையில் கொட்டி பரிமாறினால் சுவையான கறி கஞ்சி தயார்.