குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு., கணவனாக செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு ஆதரவும் - கவனிப்பும் அதிகளவில் தேவைப்படுகிறது. இந்த ஆதரவு மற்றும் கவனிப்புகளை தாயின் அருகில் இருக்கும் நீங்களான கணவர் இருக்கும் சமயத்தில் மட்டுமே கிடைக்கும். அந்த வகையில்., தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு கணவராகிய நீங்கள் அருகில் இருந்து செய்ய வேண்டிய உதவிகள் குறித்து காணலாம். 

கணவரான நீங்கள் பாலூட்டுதலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தாய்ப்பாலூட்டும் தன்மைகள் என்னென்ன? வழிமுறைகள் என்னென்ன? சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்தும்., அவற்றை அறிந்து வைத்திருக்கும் முறைகளின் தேடல்களும் தான் உங்களுக்கு பெரும் துணையாக இருக்கும். இயல்பான வாழ்க்கையில் பாலூட்டுவது சவாலான விஷயமாகும். 

breast, breast milk, தாய்ப்பால்,

பாலூட்டும் சமயத்தில் தாயின் உடலும் மனதும் சோர்வடைந்து இருக்கும் சமயத்தில்., எதுவாக சாய்ந்து கொள்ள தலையணையை தருவது., தண்ணீர் மற்றும் உணவுகள் போன்று தேவையானவற்றை தருவது., மனைவியுடன் புன்னகையுடன் அன்பாக பேசுவது., பாலூட்டும் சமயத்தில் வீட்டில் இருக்கும் செல்ல பிராணிகள் மற்றும் உறவினர்கள் தாயை காண வராத வகையில் காவலாக இருப்பது பெரும் உதவியாகும். 

breast, breast milk, தாய்ப்பால்,

தாய்ப்பால் கொடுக்கும் துவக்க சமயத்தில் முதல் முறை தாய்மையாக இருப்பின்., பெரும் கஷ்டமாக இருந்தாலும்., பிறந்த குழந்தைகளுக்கும் தாய்ப்பால் அருந்துவது சிரமத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கும். இதனால் தாயான நீங்கள் ஆத்திரத்திக்கு உள்ளாகாதீர்கள். உங்களின் மனைவியும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.. கணவனாக இருந்த நீங்கள் மனைவிக்கு மற்றொரு தாய்போல இருந்து உறுதியையும்., ஊக்கத்தையும் அளித்து., தாய்ப்பாலை குழந்தைக்கு தொடர்ந்து வழங்க நம்பிக்கை அளியுங்கள்.. 

diapers, டயப்பர், டயாபர், baby diapers,

குழந்தையின் பராமரிப்பில்., தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னரும் - பின்னரும் குழந்தையின் டயாபரை மாற்ற மறந்துவிடாதீர்கள். டயப்பர் மாற்றும் பணியை உங்களின் மனைவிதான் கவனிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. நீங்களும் உதவி செய்து பாரத்தை குறைக்கலாம். தாய்ப்பால் கொடுத்த பின்னர்., குழந்தையை நன்றாக பற்றி பிடித்துக்கொள்ள வேண்டும். 

தாய்ப்பால் கொடுப்பதில் சில சமயம் பிரச்சனை இருப்பது போல உணர்ந்தால்., தாய்ப்பால் கொடுப்பது குறித்த சந்தேகத்தை தீர்க்க மருத்துவரை நாடுவது நல்லது. உங்களுக்கான சந்தேகங்களை பெண் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு செயல்படுவது சாலச்சிறந்தது. துவக்க காலத்தில் புதிதாக குழந்தையை பெற்றெடுத்த பெண்களுக்கு தாய்ப்பால் வழங்குவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 

breast, breast milk, தாய்ப்பால்,

உங்களின் மனைவிக்கு நல்ல தோழனாக., தாயாக போதுமான அளவு அன்பையும்., பாசத்தையும் கட்டாயம் காட்டுங்கள்.. இந்த சமயத்தில் தாம்பத்திய வாழ்க்கை சிறிது தடைபட்டாலும்., புரிந்துகொண்டு விலகி நில்லுங்கள்... சரியான தருணத்தில் மனைவியே சமிக்கை கொடுப்பார்கள். சமிக்கைக்காக காத்திருங்கள். வீண் வற்புறுத்தல் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

உங்களின் குழந்தையை அன்போடு தூக்கி., மார்போடு அணைத்து கைகளின் மீது குழந்தை இருக்குமாறு பார்த்துக்கொண்டு தாய்ப்பாலை ஊட்டுங்கள்.. உங்களின் கணவர் தாய்ப்பால் அருந்த விருப்பப்பட்டால்., குழந்தைக்கு தாய்ப்பால் போதுமான அளவு உள்ளது என்பதை உறுதி செய்து வழங்கலாம். இதில் எந்த விதமான தவறும் இல்லை.. 

குழந்தைக்கு தாய்ப்பாலுடன்  தமிழ் பாலும்., பண்பாடும் சேர்த்தே ஊட்டுங்கள்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how husband help wife at baby drinking mother milk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->