தினமும் கேழ்வரகு சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா??..!!
Health Benifits of ragi
கேழ்வரகு மாவு நமது உடலுக்கு பல சத்துக்களை தரவல்லது. கேழ்வரகு மாவு காலை உணவாய் எடுத்து கொள்ளுவதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரும். தற்போது கேழ்வரகு மாவில் என்னென்ன சத்துக்கள் இருப்பது என பார்போம்.
கால்சியம் சத்து: பால் பொருட்களை விரும்பாதவர்கள் கேழ்வரகு மாவு சரியான கால்சியம் சத்து கிடைக்கும். எலும்பு தேய்மானம், மூட்டு வலி, எலும்பு புரை உள்ளவர்கள் கேழ்வரகு சாப்பிடலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்: நீரழிவு நோயை கட்டுபடுத்த கேழ்வரகு உதவும். கேழ்வரகு சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியும் இருக்காது.
வயதான தோற்றத்தை குறைக்கும் : கேழ்வரகில் இதி மெத்தியோனைன் மற்றும் லைசின் இருப்பது உங்கள் சருமச் செல்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்கிறது. விட்டமின் டி யும் இருப்பதால் இது கூடுதல் பலன் தருகிறது.

உடலுக்கு ஓய்வு : மனபதட்டம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளில் இருப்பவர்கள் கேழ்வரகை சாப்பிடுவது நல்லபலனை தரும்.
உடல் எடையை குறைக்க உதவும்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கேழ்வரகு நல்ல பலனை தரும்.