மாதவிடாய்.. பெண்கள் சொல்லாத வலியான தருணங்கள்..!! - Seithipunal
Seithipunal


மாதவிடாய் என்பது மாதத்தில் மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் பெண்களின் கருப்பையில் இருக்கும் கருமுட்டையை பாதுக்காக்க உருவாக்கப்பட்ட சிதைந்த திட்டுகள் பிறப்புறுப்பின்  வழியே வெளியேறுவது மாதவிடாய் என்று கூறுகிறோம். 

இந்த நேரத்தில் பெண்களுக்கு உடல் சோர்வு., மன சோர்வு போன்றவை ஏற்படும். இதன் காரணமாக வழக்கத்தை விட தனது குணத்தில் மாற்றமடைந்து கோபத்துடன் இருப்பார்கள். இந்த நேரத்தில் கணவன் தனது மனைவிக்கு உற்ற துணையாக இருந்து., உறுதுணையாக செயல்பட்டால் உங்களின் இல்லறத்தில் புரிதல் ஏற்பட்டு அன்பும் காதலும் அதிகரிக்கும். 

affair, illegal affair, couple enjoy, wife and husband enjoy, தாம்பத்தியம், கணவன் மனைவி,

மாதவிடாய் நேரத்தில் அன்றாட பணிகளில் இருந்து சிறிதளவு ஓய்வை வழங்கி., அவர்களின் உடல் பளுவை குறைத்துவிடுங்கள். அதிகளவு வெளியேறும் இரத்தம் மற்றும் அதனால் ஏற்படும் வலிகளின் காரணமாக உணவின் சுவையிலும் மாற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் அவர்கள் விரும்பும் உணவு வகைகளையே சாப்பிடுவதற்கு வழங்குங்கள். 

சில பெண்களுக்கு வயிற்று வலி இருக்கும்., அவ்வாறு இருக்கும் சமயத்தில் முதுகில் மசாஜ் செய்து கொடுங்கள். இதமான சூடுள்ள நீரை கொண்டு ஒத்தனம் கொடுங்கள். கால் வலி இருக்கிறது என்று கூறினால் அவர்களின் கால்களை மென்மையாக பிடித்து கொடுங்கள். 

periods, periods pain, menopause, மாதவிடாய், மாதவிடாய் கோளாறு, மாதவிடாய் வலி,

ஏற்கனவே இரத்தம் வெளியேறி வலியால் துடிக்கும் அவர்களுக்கு கலவி இன்பம் குறித்த ஆர்வம் பெரும்பாலும் இருப்பதில்லை. இந்த நேரத்தில் அது குறித்த எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. துணைக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பான முறையில் இன்பம் மேற்கொள்ளலாம். 

முகநூலில் கண்ட பதிவு: எனக்கு வயது 20 தான் ஆகிறது., திருமணம் ஆகவில்லை... எனது சகோதரர் மாதவிடாய் காலத்தில் என்னை வெறுத்து ஒதுக்குகிறான்., உன் மீது எதோ வாசனை வருகிறது., என்னை விட்டு தூர செல் என்று கூறுகிறான். ஏற்கனவே உடலாலும் மனதாலும் இந்த நாட்களில் அவதியுறும் எனக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.  

periods, periods pain, menopause, மாதவிடாய், மாதவிடாய் கோளாறு, மாதவிடாய் வலி, napkin, napkin blood, periods blood,

வாசகர்களுக்கு ஒரேயொரு வேண்டுகோள்: இது போன்ற எண்ணத்துடன் இருக்கும் பலருக்கு தெரியாத அல்லது தெரிந்த உண்மை... நாம் பிறக்கும் சமயத்தில் தாயின் கருவறையில் இருந்து வெளியே வரும் போது நம் மீது இரத்த வாடை இருக்கும்., அந்த வாடையையும் பொருட்படுத்தாமல் தான் உன்னை பெற்றெடுத்த பெண் முத்தமிட்டாள். இதற்கு மேல் விளக்கம் என்ன தருவதென்று தெரியவில்லை. 

மாதவிடாய் என்பது அனைத்து பருவமடைந்த பெண்களுக்கும் மாதம் தொடரும் மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை தொடர்வது சுழற்சி முறையில் இருக்கும். இந்த நேரத்தில் பெண்ணின் உடலில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவை பொருத்தும்., இந்த நேரத்தில் அவள் அனுபவிக்கும் இன்னல்களையும் அவளை தவிர யார் எடுத்துரைத்தாலும் புரிந்து கொள்வது இயலாது என்றாலும் அதனை ஏற்று கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் சாதரணமாக அவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் உடல் வலிகள் இருக்கும். அதனை புரிந்து கொண்டு செயல்படுவது தான் நல்லது. மாறாக அதனை கூறி வெறுத்து ஒதுக்குவது சகோதரத்துவத்திற்கு நல்லதல்ல.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls not speech about her pain during menopause or periods


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal