சமையலுக்கு மட்டுமல்ல கூந்தல் பராமரிப்பிற்கும் உதவும் நெய்..!
Ghee Helps For Hair Problems
சிலருக்கு தலைமுடி உதிர்வு, பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகள் இருக்கும். அவற்றை சரிசெய்ய கடைகளில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துவர். ஆனால், வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தும் நெய் தலைமுடிக்கு பல நன்மைகளை தருகிறது.
தலைமுடிக்கு சிறந்த கண்டிஷ்னர் :
தேங்காய் எண்ணெயுடன் ஒரு மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் நெய் கலந்து தலையில் தடவி 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து தலைக்குக் குளியுங்கள். நெய் தலைமுடி வேர்களால் உறிஞ்சப்பட்டு வறண்ட வேர்களுக்கு எண்ணெய் பிசுக்கை அளிக்கிறது.

பொடுகுத் தொல்லை நீங்க :
ஒரு மேசைக்கரண்டி நெய்யில் பாதியளவு எலுமிச்சை சாறைப் பிழிந்து தலையில் மசாஜ் செய்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
முடி வளர்ச்சி அதிகரிக்க :
பெரிய நெல்லிக்காய் துண்டுகளை நறுக்கிக் கொள்ளுங்கள். நெல்லிக்காய் முக்கும் அளவிற்கு நெய் ஊற்றி சூடு படுத்துங்கள். அதில் நெல்லிக்காய் துண்டை போட்டு கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தலையில் மசாஜ் செய்து குளித்து வர முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
English Summary
Ghee Helps For Hair Problems