பெண்களின் மார்பக காம்புகளில் ஏற்படும் வறட்சி மற்றும் புண்கள் குணமாக எளிய வீட்டு வைத்திய முறைகள் குறித்தும், மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை குறைக்கும் முறைகள் குறித்தும் இன்று காணலாம்.
திருமணம் நடந்து தாய்மை அடையும் பெண்கள், முதல் முறையாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் அனுபவம் புதிதாகவே இருக்கும். பொதுவாக தயமார்களுக்கு மார்பக காம்பு பகுதிகள் மிருதுவான தன்மையுடன் காணப்படும். இதனால் சாதாரண நாட்களில் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. குழந்தைக்கு பால் கொடுக்க தொடங்கிய பின்னர், மார்பக காம்பு பகுதியில் மிருதுவான தன்மை குறைந்து, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பல்வேறு வேதனைகளை ஏற்படுத்தும். அதனை பெண்களால் மட்டுமே உணர இயலும். மிகவும் கடுமையான வலியும் ஏற்படும்.

தாய்ப்பால் கொடுக்க தொடங்கிய நாட்களில் மார்பக காம்புகளில் வறட்சி ஏற்பட்டு புண்கள் ஏற்படும். குழந்தை பால் குடிக்கும் போது, புண்கள் ஏற்பட்டு இருப்பின் வலிகள் அதிகமாக இருக்கும். மார்பக காம்புகள் வறண்டுபோக காரணம் என்ன?. அதனை எப்படி? எளிமையான வகையில் குணப்படுத்த இயலும் என்பதை இனி காணலாம்.

மார்பக காம்பு பகுதிகளில் புண்கள் ஏற்பட காரணம் :
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தையை சரியான நிலையில் பற்றி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தவறான நிலைகளில் குழந்தையை அனைத்து தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் மார்பக காம்புகளில் புண்கள் ஏற்படும். குழந்தையை சரியான நிலையில் பற்றி தாய்ப்பால் புகட்டுவது அவசியம். குழந்தையின் வாய்ப்பகுதி தவறான நிலையில் தாயின் மறைப்பதை கவ்வி பிடிப்பதால் மார்பக காம்புகளில் புண்கள் ஏற்படுகிறது. மார்பக காம்பு பகுதியில் ஏற்படும் உராய்வால் புண்கள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற நிலை ஏற்பட்டால் அது குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் நேரம் முழுவதும் மார்பக பகுதியில் கடுமையான வழியை ஏற்படுத்தும். சில குழந்தைகள் பால் குடிக்கும் போது தாயின் மார்பக பகுதியை இறுக்கமாக கவ்வி இழுக்கும் சூழல் ஏற்படும். இதனாலும் புண்கள் ஏற்படலாம். இதனைத்தவிர்த்து, குழந்தைப்பேறுக்கு பின்னர் பெண்களின் மார்பகம் பால் வரத்தால் பெரிதாக காணப்படும். இதனால் மார்பக பகுதிகளில் தோளில் விரிவு ஏற்பட்டு, மார்பக பகுதி மற்றும் மார்பக காம்பு பகுதிகளில் வறட்சியான நிலை ஏற்படும்.

வறட்சி ஏற்பட்டுள்ள பகுதிகளில் இயல்பாக புண்கள் ஏற்பட தொடங்கிவிடும். மார்பக பகுதியில் உள்ள ஈரப்பதம் அனைத்தும் வெளியேறி, மார்பக பகுதியில் தோல் வெடிப்பு மற்றும் புண்கள் ஏற்படும். இதுபோன்ற பல வேதனைகள், வலிகள் தாய்ப்பால் கொடுக்கும் இனிய நிகழ்வை கசப்பாக மாற்றும் சூழல் நிலவுவதால், பெரும்பாலான பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. இது முற்றிலும் தவறான விஷயம். பிரச்சனையை சரி செய்து தாய்ப்பால் வழங்க வேண்டும். அதுவே குழந்தைகளின் உடல் நலத்திற்கும், பெண்களின் உடல் நலத்திற்கும் நல்லது. புண்கள் மார்பக பகுதியில் இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாம். அதனால் பிரச்சனை கிடையாது.
மார்பக காம்பு வறட்சி மற்றும் புண் குணமாக இயற்கை மருத்துவம் :
1. கற்றாழை :
கற்றாழையை எடுத்துக்கொண்டு அதன் தோலை நீக்கி, அதனுள் இருக்கும் ஜெல்லை எடுத்து மார்பக பகுதியில் தடவ வேண்டும். சோற்றுக்கற்றாழையில் இயற்கையாகவே ஈரப்பத தன்மை உள்ளதால், மார்பக பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி குறையும். புண்களை ஆற்ற உதவி செய்யும். இதனை தினமும் செய்தால் மார்பகம் மற்றும் மார்பக காம்புகளில் உள்ள புண்கள் குணமாகும்.

2. வெண்ணெய் :
மார்பகத்தில் புண்கள் ஏற்பட்டுள்ள பகுதியில் சுத்தமான வெண்ணெயை தடவினால், மார்பக பகுதியில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை குணப்படுத்த உதவி செய்யும். புண்கள் மூலமாக ஏற்படும் வலியை குறைத்து, தாய்மார்களின் மனதுக்கு இதமான சூழலை ஏற்படுத்தும்.
3. பனிக்கட்டி (Ice Cube) :
புண்கள் உள்ள மார்பு மற்றும் மார்பக காம்பு பகுதியில் வலிகள் அதிகமாக இருக்கும். இதற்கு பனிக்கட்டி வைத்து ஒத்தனம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். பருத்தி துண்டின் உள்ளே சிறிதளவு பனிக்கட்டி வைத்து 10 நிமிடம் மார்பக காம்பு பகுதியில் ஒத்தனம் கொடுத்தால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

4. சுத்தம் அவசியம் :
பாலூட்டும் தாய்மார்கள் மார்பக பிரச்சனையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மிக முக்கியமாக தேவைப்படுவது சுத்தம். தரமான மற்றும் மென்மையான துணியால் செய்யப்பட்ட உள்ளாடைகள் மிக சிறந்தது. துணிகளை சுத்தப்படுத்தும் நேரங்களில் மிதமான காரத்தன்மை கொண்ட பொடிகளை உபயோகம் செய்வது நல்லது. அதிகளவு காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட பொடிகள் மார்பகம் மற்றும் மார்பக காம்பு பகுதியில் உள்ள புண்களை ஏற்படுத்த வழிவகை செய்யும். மார்பக பகுதியில் ஏற்படும் வியர்வை காரணமாக அமிலத்தன்மை கொண்ட பொருட்கள் மேலும் வேதனையை அதிகரிக்கும்.
5. தாய்ப்பாலே சிறந்த மருந்து :
தாய்ப்பால் சிறந்த மருந்து என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இயற்கையாகவே தாய்ப்பால் புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது, கிருமிகளையும் அழிக்கும். தாய்ப்பாலை மார்பகம் மற்றும் மார்பக காம்புகளில் புண்கள் உள்ள, வறட்சி உள்ள பகுதிகளில் தீயதால் அது வறட்சியை சரி செய்து புண்களை குணப்படுத்தும். நாளொன்றுக்கு 5 முறை தாய்ப்பாலை புண்கள் உள்ள பகுதிகளில் தடவலாம்.

6. தேங்காய் எண்ணெய் :
சருமத்தை மிருதுவாக்கும் குணம் கொண்ட தேங்காய் எண்ணெயை, புண்கள் உள்ள பகுதிகளில் தினமும் 4 முறைகள் தேய்க்கலாம். இதனால் மார்பக தோளில் உள்ள வறட்சி நீங்கி, புண்கள் குணமாகிறது. கடைகளில் பிரதானமாக விற்பனை செய்யப்படும் கலப்பட தேங்காய் எண்ணெயை விடுத்தது, செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய்யை உபயோகம் செய்வது நல்லது. கலப்பட எண்ணெய் மேலும் பிரச்சனையை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
7. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் நிலைகள் :
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தையின் வாய்ப்பகுதி மார்பக காம்பை கவ்வி பிடித்துள்ளதா? என சரி பார்க்க வேண்டும். குழந்தையின் தலை பகுதியில் கையை வைத்து, பிற இடங்களுக்கு குழந்தை நகராத வகையில் உறுதி செய்து பால் கொடுக்கலாம். தாய்ப்பாலை குழந்தைகளுக்கு ஊட்டும் போது தொட்டில் நிலை சிறந்தது ஆகும். தேவைப்படும் பட்சத்தில் தலைப்பகுதிக்கு உரிய பிடிமானம் ஏற்பட தலையணையை வைத்துக்கொள்ளலாம்.

8. அவசியமான காற்றோட்டம் :
தாய்ப்பாலூட்டும் பெண்களும் சரி., சாதாரண பெண்களும் சரி.. இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். தாய்ப்பாலூட்டும் பெண்கள் இறுக்கமான உடைகள் அணிந்தால் போதிய காற்றோட்டம் கிடைக்காது. தளர்வான ஆடைகளை உடுத்துவதால் உடல் பகுதிக்கு தேவையான காற்றோட்டமும் கிடைக்கும், மார்பக பகுதியில் ஏற்பட்டுள்ள புண்களும் குணமாக வழிவகை செய்யும்.
9. ஆலிவ் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெய்யும், தேங்காய் எண்ணெயும் மார்பக புண்களை குணப்படுத்த உதவி செய்யும். ஆலிவ் எண்ணெயை உள்ளங்கையில் வைத்து விரலை கொண்டு மார்பகம் மற்றும் முலைக்காம்பு பகுதியில் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

10. துளசி இலைகள் :
துளசி இலைகளை தேவையான அளவு கைகளில் எடுத்து சுத்தமாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர், இதனை மார்பக காம்பு பகுதியில் தடவி கொடுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் மார்பக காம்பு மற்றும் மார்பக பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி, புண்கள் குணமாகும்.
11. வைட்டமின் சி :
குழந்தைப்பேறு பெற்றுள்ள பெண்கள் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்ளலாம். இதனால் சரும பிரச்சனைகள் நிவர்த்தியாகும். ஆரஞ்சு பழம், எலுமிச்சை பழம், கிவி பழம், கொய்யாப்பழம், ஸ்டாபெரி பழம், பசலைக்கீரை, தக்காளி பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முட்டைகோஸ், திராட்சை பழம் போன்றவையும் வைட்டமின் சி சத்தை வழங்கும் உணவுகள் ஆகும்.

மருத்துவரை அணுக தயக்கம் அல்லது தாமதம் கூடாது :
மார்பகம் மற்றும் மார்பக காம்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் சாதாரண அளவில் இருந்தால், எளிய முறையில் மேலுள்ள வீட்டு இயற்கை வைத்தியம் மூலமாகவே குணப்படுத்திவிடலாம். மார்பகம் மற்றும் மார்பக காம்பு வறட்சி, புண்கள் அதிகளவு இருக்கும் பட்சத்தில் மருத்துவரை நாடுவது சாலச்சிறந்தது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன்னர், மார்பகம் மற்றும் மார்பக காம்பு பகுதிகளை சுத்தம் செய்து பால் கொடுப்பது நல்லது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.