கெட்டியான தயிர் தயாரிக்க வேண்டுமா..?!   - Seithipunal
Seithipunal


குளிர் காலத்தில் கெட்டியான தயிர் கிடைக்க, உறைக்கு மோர் சேர்க்கும் போது, அதில் சிறிதளவு புளி உருண்டையாகப் போட்டால் கெட்டியான தயிர் கிடைக்கும்.

பாகற்காய் பொரியல் செய்யும் போது கொஞ்சம் தயிர் ஊற்றி ஊற விட்டு கொஞ்சம் நேரம் கழித்து வதக்கினால் கசப்பு அதிகமாக இருக்காது.

ஐஸ்கிரீம் தயாரிக்கும் முன் அந்தக் கலவையுடன் இரண்டு டீஸ்பூன் குளுக்கோஸ் சேர்த்தால், ஐஸ்கிரீம் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

பீட்ரூட் தோலில், மிளகாய், உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், சீரகம் ஆகியவற்றை வதக்கி, அரைத்து கூட்டு செய்தால் பூரி, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

தயிர் பச்சடியில் வெங்காயம் சேர்ப்பதற்கு பதிலாக கோவைக்காயை சேர்த்தால் தயிர் பச்சடி வித்தியாசமான சுவையாக இருக்கும்.

குலோப் ஜாமூன் பாகில் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு இறக்கினால், பாகு உறையாமலும், நீண்ட நேரம் கெடாமலும், சுவையாகவும் இருக்கும். 

இனிப்பு வகைகள் செய்யும்போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது தேனை பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும்.

பஜ்ஜி, வடை, வடகம் செய்யும் எண்ணெயில் ஒரு சிறிய துண்டு இஞ்சியைத் தட்டிப் போட்டால் பொரித்த பலகாரங்கள் நல்ல மணமாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

curd preparation in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->