இன்பமான வலி.. உருவாகியது எதிர்காலம்., பத்தியம் என்ற இல்லறம்.. கசப்பை இனிப்பாக மாற்றுங்கள்.!! - Seithipunal
Seithipunal


தம்பதிகள் தங்களுக்கான சந்ததியை உருவாக்கும் நோக்கில் மனதளவிலும்., உடலளவிலும் இணைந்து தனது சந்ததியை உருவாக்குகின்றனர். இந்த நிகழ்வான தாம்பத்தியம் தம்பதிகளுக்குள் இயந்திரத்தனமாக இருக்க கூடாது. தம்பதிகளின் ஈர்ப்பு., இணைப்பு மற்றும் காதல் என்ற படிகளில் துவங்கி., காதலை ஜீவ நதியாக வைப்பதன் மூலமாக., எதிர்கால சந்ததியை வலுப்பெற கட்டமைக்கிறது. தம்பதிக்கிடையே இருக்கும் காதல் - பாசம் என்பது கட்டாய தேவைகளில் ஒன்றாகும். தாம்பத்தியம் என்ற ஈர்ப்பால்., எதிர்கால சந்ததியை உருவாக்க மேற்கொள்ளப்படும் தாம்பத்திய பயணம் இனிதாக இருக்க வேண்டும். 

தாம்பத்தியத்திற்கு பின்னர் தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதால்., தாம்பத்தியத்தில் ஏக்கம் - எதிர்பார்ப்பு - ஏமாற்றம் - மனஉளைச்சல் என்று பல கட்டமாக வளர்ந்து., தாம்பத்திய இன்பத்தை அடுத்தடுத்து கையெடுக்க விடாமல் தகர்த்துவிடுகிறது. தம்பதிகளின் தாம்பத்திய தடைக்கு ஏற்படும் பிரச்சனையை அறியாததால்., தாம்பத்தியம் குறித்த தவறான நம்பிக்கையும் தம்பதிகளுக்குள் உண்டாகிறது. மேலும்., குழந்தையின்மை பிரச்சனையும் தம்பதிகளுக்குள் தாம்பத்திய இன்பத்தில் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது.

baby, baby died, cute baby, அழகிய குழந்தை, குழந்தை, குழந்தையின் கால்கள்,

திருமணம் முடிந்த பின்னர் தம்பதிகளின் பணி சூழ காரணமாகவும்., இதர காரணமாகவும் தாம்பத்தியம் மாத்திற்கு சில முறைகள் மட்டுமே நடக்கும். சில சமயத்தில் கணவர் வெளியூரில் பணியாற்றுவது., சில மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு., நீண்ட நாள் இடைவெளிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் தாம்பத்தியம் குழந்தையின்மை பிரச்சனைக்கும் வழிவகுக்கிறது. தம்பதிகள் தங்களை அடிக்கடி சந்தித்து காதலையும் - பாசத்தையும் பரிமாறுவது அவசியம். தம்பதிகள் தங்களுக்குள்ளான நல்ல விஷயத்தை மாறி மாறி கூறி பாராட்டிக்கொள்ள வேண்டும். 

"நீ அணிந்திருக்கும் உடை நன்றாக உள்ளது"., "நான் உனக்கு முக்கியமானவன் - எனக்கு நீதான் முதன்மையானவள்" என்று வெளிப்பாடும் காதலும் இருக்க வேண்டும். தம்பதிகள் அடிக்கடி தாம்பத்தியத்தில் ஈடுபடுவது அவசியம். அடிக்கடி மேற்கொள்ளப்படும் தாம்பத்தியம் அன்பின் வெளிப்பாட்டில் துவங்கி இருக்க வேண்டும். மாறாக சொந்த மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வது போல இருக்க கூடாது. ஆண்களின் ஆணுறுப்பை பொறுத்த வரையில் விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் விந்து விரைவாக வெளியேறுதல் போன்ற பிரச்சனை ஏற்படும். 

கணவன் மனைவி, காதல் ஜோடி, love couple, couple love, husband wife love,

இந்த இரண்டு பிரச்சனையின் காரணமாக குழந்தையின்மை மற்றும் தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது. பாரம்பரியம் மற்றும் கலவிக்கான சந்தேகம் மற்றும் தீர்வுகள்., தாம்பத்தியம் குறித்த தகவலை தெரிந்திருக்க கூடாது என்று வளர்க்கப்பட்ட ஆணும் - பெண்ணும் திருமணத்திற்கு பின்னர் தாம்பத்திய விஷயத்தில் கூச்சப்பட்டு இருக்கலாம். இருபாலரும் அவர்களின் எண்ணத்தை பொறுத்து சில விஷயத்தில் அருவறுப்படையாளம். மேலும்., தாம்பத்தியம் மற்றும் தாம்பத்திய நிலைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும் காரணமாக உள்ளது.  

இவ்வாறான தம்பதிகள் மற்றும் நபர்களிடம் தாம்பத்தியம் என்பது வாழ்க்கை மற்றும் இல்லறத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்ற எண்ணமே இருக்காது. இதனாலேயே பெரும்பாலும் தாம்பத்தியம் வைப்பதில் தயக்கம் மற்றும் குழப்பம் காரணமாக குழந்தைகள் உருவாகாமல் போய்விடுகிறது. இருபாலருக்கும் உடலளவில் பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்து கொள்ள வரும் நபர்களில் 50 விழுக்காடு அளவிற்கு இருபாலரிடமும் பிரச்சனை உள்ளது. 

sad enjoy, couple enjoy sadly, கணவன் மனைவி பிரச்சனை, தாம்பத்திய பிரச்சனை, husband wife problem, couple affair problem,

தம்பதிகளில் இருபாலரும் சோதனை செய்யப்பட்டதில் ஆண்களை பொறுத்த வரையில் உயிரணுவின் எண்ணிக்கை குறைவாகவும்., ஆண்களின் வயது கூட கூட உயிரணுவின் எண்ணிக்கை குறைத்துக்கொண்டு செல்லும் நிலையும் ஏற்படும். தாமதமான திருமணத்தால் ஆண்களின் உயிரணு எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. பணிக்காக மற்றும் பிற சூழலிற்காக 30 வயதிற்கு மேல் திருமணம் செய்வதால்., குழந்தைப்பேறு பிரச்சனைக்கு உயிரணுவின் எண்ணிக்கை குறைந்து., உற்பத்தி பாதிக்கப்பட்டு., உயிரணு பயணிக்கும் குழாயில் அடைப்பு போன்ற பிரச்சனை ஏற்படும். மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யும் வாய்ப்புகள் உள்ளது.  

பெண்களை பொறுத்த வரையில் கருப்பையில் ஏற்படும் நீர்க்கட்டி பிரச்சனை., கருமுட்டை வெளியேறும் குழாயில் ஏற்படும் அடைப்பு., கருமுட்டை உற்பத்தியான பின்னர் கருக்குழாய் வழியே கருப்பையை அடைவது., தாம்பத்திற்க்கு பின்னர் ஆணின் உயிரணு பெண்ணுறுப்பில் செலுத்தப்பட்ட பின்னர் கருமுட்டையை அடைய இயலாமை போன்ற காரணத்தால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக தம்பதிகள் திருமணத்திற்கு பின்னர் இரண்டு வருடம் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுப்பது இன்று வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. 

affair, illegal affair, couple enjoy, husband wife enjoy, கணவன் மனைவி தாம்பத்தியம், தாம்பத்தியம்,

இதனை தவிர்த்து இருவருக்குள்ளும் ஏற்படும் புரிதலின் மூலமாக தடையற்ற தாம்பத்தியத்தை மேற்கொள்ள வேண்டும். தாம்பத்தியம் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியோடு கலந்து இருக்க வேண்டும். வருடங்கள் ஓடியும் குழந்தைப்பேறு இல்லையேல்., குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கான காரணத்தை அறிய வேண்டும். குழந்தையின்மை பிரச்சனைக்கு தம்பதிகள் தயக்கமின்றி பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இருவரும் தங்களையோ அல்லது பிறரையோ காரணம் காட்டி குழந்தையின்மையை கூறுவது நல்லதல்ல...

இதனை தவிர்த்து குழந்தையின்மையால் ஊர் என்ன சொல்லுமோ? யாருக்கு எத்துணை பதில் சொல்ல காத்திருக்கிறோமோ? என்ற அச்சமே தாம்பத்தியத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிடும். இதனால் மகிழ்ச்சியான தாம்பத்தியம்., அவசரத்தோடும் - அரைகுறையோடும் நடக்கும். இந்த விஷயத்தில் தாம்பத்தியத்தில் தம்பதிகளின் தன்னம்பிக்கை குறையும் பட்சத்தில் மன ஓட்டங்களை வைத்து ஆணுறுப்பின் விறைப்பு தன்மை மற்றும் பெண்ணின் மன குமுறலால் பிறப்புறுப்பில் திரவம் சுரக்காமல் தாம்பத்திய வலி போன்ற பிரச்சனை ஏற்படும். 

affair, illegal affair, couple enjoy, தாம்பத்தியம், கணவன் மனைவி,

இது போன்ற பிரச்சனைகள் உள்ள தம்பதிகள் மனதளவில் முதலில் வலிமையாக இருந்தாலும்., குறிப்பிட்ட கட்டத்திற்கு மேலாக தங்களின் மனதை தேற்ற இயலாமல் தலைகுனிவர். மனம் எதிர்கால சந்ததியை விரும்பி ஏங்கினாலும்., தாம்பத்திய நேரத்தில் வரும் எண்ணத்தை பொறுத்து தாம்பத்தியத்தில் இன்முகத்துடன் செயல்படும் தன்மை குறைந்து., விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் பிறப்புறுப்பு திரவ சுரப்பு பிரச்சனை ஏற்படும். உயிரணுக்கள் பிரச்சனை என்றால் இயற்கை மருந்துகள் மற்றும் ஆங்கில மாத்திரைகள் வழங்கி சரி செய்யலாம்.

மேலும்., குழந்தையின்மைக்காக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளும் தம்பதிகளுக்கு தாம்பத்திய இன்பத்தை பாதிக்குமா? என்ற சந்தேகமும் நிலவுவது வழக்கம். பொதுவாக குழந்தையின்மை சிகிச்சையை பொறுத்த வரையில் விரைவான சிகிச்சை முறைகள்., தாம்பத்திய கசப்பை குறைத்துவிடும். தம்பதிகள் இரண்டு வருடத்திற்குள்ளாகவே குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று உணர்ந்தால்., சிகிச்சை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.. இல்லையேல் மருத்துவரிடம் ஆலோசனையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். தம்பதிகளின் பாலியல் கல்வி., நல்ல உறக்கம்., சத்தான உணவு., உடற்பயிற்சி., துணையுடன் மகிழ்ச்சியாக பேசி அன்பை வெளிப்படுத்துதல் போன்றவை இருக்க வேண்டும். நன்றி.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couple enjoy hearty with feeling is good for future


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal