சுலபமான ''தேங்காய் பிஸ்கட்'' இப்படி ட்ரை பண்ணுங்க.!
Coconut Biscuits recipe in Tamil
தித்திக்கும் சுவையில் தேங்காய் பிஸ்கட் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு
வெண்ணெய்
சர்க்கரை
தேங்காய் துருவல்
வெண்ணிலா சுகர் பவுடர்
பாதாம்
உப்பு
செய்முறை:
முதலில் உருக்கிய வெண்ணையுடன் தேங்காய் துருவல் , பாதாம் பருப்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, மைதா மாவு, வெண்ணிலா சுகர் பவுடர், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவை அரை மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து தேவையான அச்சுகளில் வெட்டி ஒரு ட்ரெயில் வெண்ணை தடவி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மைக்ரோவேவ் அவனில் 180 டிகிரி செல்சியஸ் 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பிஸ்கட் தயார்.
English Summary
Coconut Biscuits recipe in Tamil