கேள்விப்படாத கேரட் லஸ்ஸி செய்வது எப்படி?
carrot lassi receipe
நாம் இதுவரைக்கும் தயிர் லஸ்ஸியை தான் கேள்விபட்டிருப்போம். ஆனால் முதல் முறையாக கேரட் லஸ்ஸி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையானவை :
கெட்டித் தயிர்
சர்க்கரை
கேரட்
பால்
ஏலக்காய் பொடி
செய்முறை:
கேரட்டை தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த கேரட்டை மிக்ஸியில் போட்டு, பால், சர்க்கரை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் தயிர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், கேரட் லஸ்ஸி தயார்.