இனி இதை காலை உணவாக எடுத்து கொள்ளுங்கள்..!! - Seithipunal
Seithipunal


காலையில் உணவை நாம் சத்து நிறைந்ததாக எடுத்துகொள்வது அந்த நாள் முழுமைக்கும் புத்துணர்வுடன் செயல்படவைக்கும். அப்படி காலையில் ஹெல்தியான ரெசிபி.

தேவையான பொருட்கள்:

நறுக்கப்பட்ட சுரைக்காய் -1 பவுல்
வெள்ளரிக்காய் - 1 பவுல்
செலரி - 1 பவுல்
புதினா இலைகள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - அரை பழம்
சீரக தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு மிக்ஸி சாரில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். அவற்றை நன்கு அரைத்து விட்டு ஒரு வடிக்கட்டியில் வடிகட்டவும். பின்னர் அவற்றை ஒரு டம்ளருக்கு மாற்றி பருகலாம்.

நலன்கள்:

இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. உடலையும் கல்லீரலையும் நச்சுத்தன்மை இல்லாமல் ஆக்குகிறது. மேலும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை கண்களின் செயல்பாட்டிற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் உதவுகின்றன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bottle Gourd Juice


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal