ஏராளமான நன்மைகளை வாரி கொடுக்கும், மூங்கில் அரிசி.!  - Seithipunal
Seithipunal


மூங்கில் அரிசியின் நன்மைகள்

மூங்கில் அரிசி. பெரும்பாலும் அதனை பயன்படுத்துவதில்லை. 40 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூவில் அரிசி கிடைக்கும். கிடைப்பது அரிது என்பதால் அதன் பயன்பாடும் குறைவாக இருக்கிறது. ஆனால் மூங்கில் அரிசியில் தான் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது.

ஒரு கப் மூங்கில் அரிசியில் 160 கலோரி இருக்கிறது. டயட் இருப்பவர்கள் மூங்கில் அரிசியை எடுத்துக் கொள்ளலாம். குறைவான கலோரி இருப்பதால் அரிசி சாப்பிட்டால் தொப்பை வரும் என்ற கவலை கொள்ளத் தேவையில்லை.

மூங்கில் அரிசியில் முக்கிய பங்கு வகிப்பது கார்போஹைட்ரேட். ஒரு கப் அரிசியில் 34 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும். இது ஓட்ஸை விட 10 கிராம் அளவு அதிகம். நீண்ட நேரம் எனர்ஜியுடன் இருக்க உதவிடும் இது.

மூங்கில் அரிசியில் குறைந்த அளவே ஃபைபர் இருக்கிறது. ஒரு கப் அரிசியில் 1 கிராம் அளவு கிடைக்கும். செரிமானத்திற்கு ஃபைபர் மிகவும் தேவைப்படும். மூங்கில் அரிசியில் கொழுப்பு கிடையாது. இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் எனர்ஜி கிடைப்பதுடன் விட்டமின் மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம்.

மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது.

ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். அவர்கள் சாப்பிட்ட மூங்கில் அரிசிக் கஞ்சியின் விவரம் - மூங்கில் அரிசி, நொய் அரிசி -  வகைக்கு 150 கிராம், சீரகம், ஓமம் - வகைக்கு அரைத் தேக்கரண்டி, பல்பூண்டு - 6, சுக்கு - ஒரு துண்டம், நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.

மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில்,  நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.

நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும்.

மூங்கில் அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

கருத்தரித்த பெண்களுக்கு சிறந்தது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது. எனவே கர்ப்பமான பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிட செய்யலாம்.

மூங்கில்  அரிசியை சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் வலு பெரும். இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.
குழந்தைபேறு உருவாக்குவதில் மூங்கில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் குழந்தை இல்லாதவர்கள் மிகவும் குறைவு. இதற்க்கு அவர்கள் உண்ட மூங்கில் அரிசியும் ஒரு மிக முக்கிய காரணம்.

மூங்கில் அரிசி மட்டுமல்ல அதன் வேரிலிருந்து நுனி வரை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தது. அவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைத்திடும். மூங்கில் மரத்தின் வேரைத்து அரைத்து முகத்தில் தடவி வர, அம்மைத் தழும்பை நீக்க உதவும்.

மூங்கில் இலைகளை அரைத்து அரிப்பு வந்த இடத்தில் பூசி வந்தால் அரிப்பு குறைந்திடும்.சரும நோய்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் உங்கள் சருமத்தை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கும்.

காயம் ஏற்பட்டு வீக்கமோ அல்லது ரத்தக்கசிவோ ஏற்பட்டால் மூங்கில் இலை அல்லது அதன் தண்டுப்பகுதியை எரித்த சாம்பலையோ போட்டால் உடனடியாக குறைந்துவிடும்.

மூங்கில் வேரின் சாம்பலைக் கொண்டு பற்களை லேசாக மசாஜ் செய்து வர பற்கள் வெண்மையாகும் அத்துடன் ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் பாக்டீரியா தொற்று வராமல் காத்திடும். தினமும் இரண்டு வேலை இதனை செய்திடலாம்.

தலை வலி மற்றும் இடுப்பு வலிக்கு உடனடி நிவாரணம் கிடைத்திடும். மூங்கில் குறுத்தை அரைத்து பத்து போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வேரின் சாம்பலையும் இதற்கு பயன்படுத்தலாம்.

ரெகுலரான பீரீயட்ஸ் வரவில்லை என்று கவலைப்படும் பெண்களுக்கு மூங்கில் இலை சிறந்த நிவாரணமாக இருக்கும். கர்ப்பப்பை கோளாறுகளுக்கும் மூங்கில் நல்ல பலனை கொடுத்திடும். மூங்கில் இலைகளை 20 மில்லி கிராம் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்திடுங்கள் அதன் அளவு பாதியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். தினமும் இந்த நீரை குடிக்கலாம்.

சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்ப்பட்டால் மூங்கில் இலைச்சாறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மூங்கில் இலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திட வேண்டும். 200 கிராம் தண்ணீரிலிருந்து 40 கிராம் தண்ணீர் வரை குறைய வேண்டும். பின்னர் அதுனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

நாய் கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு முன்னால் மூங்கில் வேர் பொடியுடன் பால் கலந்து கொடுத்தால் பாக்டீரியா பரவுவது குறையும். மூங்கிலுக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of moongil arisi in tamil 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal