நெற்றியின் திலகமும், பாசமான முத்தமும்... வியக்கவைக்கும் அறிவியல் உண்மை..!! - Seithipunal
Seithipunal


நமது இந்தியாவில் பெண்கள் நெற்றியில் திலகம் இடுவது வழக்கமான ஒன்றாகும். இதில் திருமணம் முடிந்த பெண்களுக்கென நெற்றியின் உச்சியில் திலகமும், திருமணம் முடியாத பெண்களுக்கு இயல்பாக நெற்றியில் கண்களின் புருவத்திற்கு இடையே திலகமும் இடுவது இயல்பான ஒன்றாகும். 

நெற்றியில் திலகம் இடுவது இரண்டு புருவங்களின் இடையில் உயிர் இரத்த ஓட்டத்தினை தூண்டும் ஆக்கின் என்ற மையம் இருக்கிறது. இதில் நெற்றி வகிட்டில், நெற்றியின் நடுவே உள்ள இரு புருவ மத்தியின் நெல் அளவிற்கான இடத்தை வர்ம மருத்துவத்தில் திலர்த வர்மம் என்று கூறுவார்கள்.

இந்த இடத்தினை தூண்டுவதால் மனதின் அமைதி அதிகரித்து, மனஇறுக்கம் விலகும். தலைவலி, ஒற்றை தலைவலி, மூச்சுத்திணறல், நினைவுத்திறன் குறைதல் போன்று பல பாதிப்புகள் சரியாகும். இதே அடிப்படையில் வர்ம மருத்துவர்கள் சில பிரச்சனைகளை சரி செய்கின்றனர். அதன் நுணுக்கங்கள் அவர்களுக்கு தெரியும். 

நெற்றியில் சிலர் நெற்றிப்பகுதிக்கு நடுவே பொட்டு வைத்திருப்பார்கள். அது தலைமுடியை வகிடெடுக்கும் போது போட்டு வைத்து கொள்வார்கள். இதனால் பல நன்மைகள் ஏற்படுகிறது. திருமணம் முடிந்த பெண்கள் நெற்றியின் வகிட்டில் போட்டு வைப்பதன் காரணமாக, அவர்களின் அடிவயிற்றில் இருந்து பாலியல் சுரப்பிகள் தூண்டப்பட்டு, கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. இதனால் கர்ப்ப கால சிக்கலும் ஏற்படாமல், சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 

உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் ஆறாவதாக இருக்கும் சக்கரம், புருவத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இது தூண்டப்படவுதால் மூளை, நரம்பு, காது, மூக்கு, இடது கண் ஆகியவற்றை கட்டுப்படுத்தி, புத்திக்கூர்மை மற்றும் ஆன்ம சக்தியை அதிகரிக்கும். 

அன்பு கொண்ட பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யும் நேரங்களில் நெற்றியில் முத்தமிடுவார்கள். உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் நெற்றியில் முத்தமிட்டாள் உணர்ச்சிகள் மேலோங்கும். இது பெரும்பாலும் காதலன், காதலிகளுக்குள் அதிகளவு இருக்கும். இவர்கள் தங்களுக்குள் அதிகளவு அன்பை பராமரித்துக்கொள்வார்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of bruising in forehead


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal