ஆரோக்கியம் நிறைந்த ''பீட்ரூட் கார பணியாரம்'' ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க.!  - Seithipunal
Seithipunal


சுவையான ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் கார பணியாரம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
பீட்ரூட் 
அரிசி 
உளுத்தம் பருப்பு 
வெந்தயம்
உப்பு 
நல்லெண்ணெய் 
கடுகு 
கடலை பருப்பு 
வெங்காயம் 
கருவேப்பிலை 
பச்சை மிளகாய் 

செய்முறை: 
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி வைத்துக் கொள்ளவும். அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மூன்றையும் ஐந்து மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். 

பிறகு ஊற வைத்துள்ளவற்றை கிரைண்டரில் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை  சேர்த்து தாளிக்கவும். 

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய பீட்ரூட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதக்கியவற்றை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் கார பணியாரம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Beetroot Paniyaram Recipe in tamil


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->