பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட இளைஞர் பலி...! கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
youth who shouted slogans support Pakistan was killed shocking incident Karnataka
கர்நாடகா மாநிலத்தில் மங்களூரில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இளைஞன் ஒருவன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமீட்டான்.

அந்தக் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் பத்து அணிகள் கலந்துக் கொண்டது.மேலும் கிரிக்கெட் போட்டிக்கான மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த இளைஞன், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.இது சில நிமிடத்தில் மோதலாக மாறி அவர்கள் அந்த இளைஞனை உதைத்தும், தடியால் தாக்கியும் உள்ளனர்.
இதனால் உடலின் உட்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக காவலர்கள், இளைஞன் உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பியது.மேலும் விசாரணையில், இந்த சம்பவத்தில் 15 பேரை கைது செய்துள்ளனர்.இது தற்போது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth who shouted slogans support Pakistan was killed shocking incident Karnataka