நீதிமன்ற வாசலில் வாலிபர் கழுத்தறுத்து கொலை - உ.பியில் பயங்கரம்.!!
youth murder in up court
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்ஷாஹர் பகுதியை சேர்ந்தவர் வாலிபர் நாயிப். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் நாயிப், தனது உறவுக்கார பெண்ணை பதிவு திருமணம் செய்வதற்காக மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவரும் நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள ஸ்டூடியோவில் போட்டோ எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கத்தியால் நாயிப்பை சரமாரியாக தாக்கி, அவரது கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நாயிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.