திண்டுக்கல் || தமிழ் மொழியைக் கிண்டலடித்த வடமாநில வாலிபர் - ஆத்திரத்தில் வாலிபர் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் அருகே வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த சங்கர் என்பவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சூட்டுமாசி என்ற இளைஞரும் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழ் பழக்க வழக்கங்கள் குறித்து வடமாநில இளைஞர், சங்கரிடம் அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சங்கர் வெங்காயம் வெட்டும் கத்தியால் வடமாநில இளைஞரை சரமாரியாக குத்தியுள்ளார். 

இதில், வடமாநில இளைஞர் படுகாயமடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth attack north state man in dindukal


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->