தேர்தல் ஆணையத்திற்கு இரங்கல் தெரிவித்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி ஜுன் மாதம் 1ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, கேரளா மாநிலத்தில் மொத்தமுள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 26ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 71.16 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், கேரளாவின் கொச்சி மாவட்டம் கக்கனட் பகுதியை சேர்ந்த முகமது சஜி 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக முகமது சஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for condoles to election commission in kerala


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->