இண்டிகோ விமானத்தின் கழிவறையில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது.! - Seithipunal
Seithipunal


இண்டிகோ விமானத்தில் இளம்பெண் ஒருவர் கழிவறையில் சிகரெட் பிடித்து எறிந்த நிலையில் குப்பைத் தொட்டியில் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப நாட்களாகவே விமானத்தில் பல அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் இருந்து புறப்பட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூ ரு நகர் நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. 

இந்த விமானம் தரையிறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு, ஊழியர் ஒருவர் விமான கழிவறையை சோதனை செய்துள்ளார். அப்போது, அங்குள்ள குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது. 

இதைப்பார்த்த ஊழியர் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக அதனை தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார். அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததனர். 

அதில், கொல்கத்தாவில் உள்ள சீல்டா பகுதியை சேர்ந்த பிரியங்கா சக்ரவர்த்தி என்ற இளம்பெண் விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்து எரிந்த நிலையில் சிகரெட் துண்டை போட்டது தெரிய வந்தது. 

இதைத் தொடர்ந்து விமானம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் விமான ஊழியர்கள் பிரியங்காவை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த இளம்பெண்ணை காவலுக்கு அழைத்து சென்றனர். மேலும், அவரிடம் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young woman arrested for smoking cigarette in indigo flight lavatory


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->