பிரபல பத்திரிகையாளர் கீதா மேத்தா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்.!
writer and reporter geetha metha passed away
பிரபல பத்திரிகையாளர் கீதா மேத்தா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்.!
டெல்லியைச் சேர்ந்தவர் கீதா மேத்தா. பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த இவா், ‘கா்ம கோலா’, ‘ஸ்னேக் அன்ட் லேடா்ஸ்’, ‘எ ரிவா் சூத்ரா’, ‘ராஜ்’, ‘தி எடா்னல் கணேசா’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளாா்.
அதுமட்டுமல்லாமல், ஆவணப்பட இயக்குநா் மற்றும் பத்திரிகையாளராகவும் செயல்பட்டு வந்த இவர், வயது மூப்பு காரணமாக உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கீதா மேத்தா டெல்லியில் உள்ள தனது வீட்டில் காலமானாா்.

அவருடைய மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "எழுத்தாளா் கீதா மேத்தா பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக இருந்தாா்.
அறிவுத்திறன், எழுத்து மற்றும் ஆவணப்பட இயக்கம் தாண்டி, இயற்கை மற்றும் குடிநீா் பாதுகாப்பிலும் தீவிரமாக செயல்பட்டார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இதே போல், பல்வேறு தரப்பினரும் கீதா மேத்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
writer and reporter geetha metha passed away