காற்று மாசுபாடு || முதலிடம் பிடித்த டெல்லி.! வெளியான அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


உலகளவில் காற்றின் தரம் குறித்து மதிப்பீடு செய்து காற்று மாசுபாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உதவும் வகையில் கடந்த 2007-ம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

தற்போது, இந்த அமைப்பு, ஆசிய நாடுகளில் அதிக மாசடைந்த நகரங்கள் குறித்து ஆய்வு செய்து டாப் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் இடம் பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, உலகளவில் அதிக காற்று மாசுபாடுடைய நகரங்களை கொண்ட நாடுகளின் தர வரிசையில் கத்தார் நாட்டுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் காற்று தர குறியீடு அமைப்பு வெளியிட்டு உள்ள தகவலின்படி, தீபாவளி நாளில் அதிக மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் இந்தியாவில் உள்ள டெல்லி மாநிலம் முதலிடத்திலும், பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 

தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இதனால், மனிதர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 

இருப்பினும், இந்த டாப் 10 பட்டியலில் இந்தியாவின் தலைநகரான டெல்லி இடம் பெறவில்லை என்று உலக காற்று தர குறியீடு அமைப்பின் தகவலை அடிப்படையாக வைத்து, டெல்லியின் முதலமைச்சர் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

அத்துடன், "டெல்லியில், கடந்த ஆண்டு இதே நேரத்தில் வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வுகள், 15 சதவீதம் என்று இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அது 2 முதல் 3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது" என்ற தகவலையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். எனினும், டெல்லியில் காற்றின் தரம் ஒட்டுமொத்த அளவில் இன்று 323 புள்ளிகளாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Air Quality Index System air polution delhi first place


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->