மகாராஷ்டிராவில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலை நேரம் உயர்வு – அரசு சட்டத்திருத்தம்! - Seithipunal
Seithipunal


மும்பை: மகாராஷ்டிராவில் தனியார் நிறுவன ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 9 மணிநேரத்தில் இருந்து 10 மணிநேரமாக அதிகரிக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தொடர்பாக சட்டத்திருத்தம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை நேரம் 10 மணி நேரமாகவும், தொழிற்சாலைகளில் வேலை நேரம் 12 மணி நேரமாகவும் உயர்த்தப்படும்.

முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதும்தான் இந்த மாற்றத்தின் நோக்கம் என அரசு விளக்கியுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இதே சட்டம் நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Working hours increase for private company employees in Maharashtra government amends law


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->