தண்டவாளம் அருகே கிடந்த புதுப்பெண் சடலம் - திட்டமிட்ட கொலையா? என போலீசார் விசாரணை.!!
women body found near railway trake in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்த வித்யா என்பவருக்கும், சோமலாப்புரா கிராமத்தை சேர்ந்த சிவு என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அதன் பின்னர் தம்பதியினர் இருவரும் பெங்களூரு சங்கராப்புரா பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், தம்பதியினருக்கு இடையே கடந்த 30-ந் தேதி தகராறு ஏற்பட்டதனால் வித்யா வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிவு, சங்கராப்புரா போலீசில் புகார் அளித்தார்.
அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து வித்யாவை தேடி வந்த நிலையில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளம் அருகில் புதுப்பெண் வித்யா, உடலில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே போலீசார் வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிவுவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் வித்யாவின் பெற்றோர் வரதட்சணை கொடுமையில் தங்களது மகளை சிவு கொலை செய்துவிட்டதாக கூறி சென்னகிரி போலீசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் வித்யாவை கொன்று உடல் தண்டவாளம் அருகே வீசப்பட்டதா? அல்லது ஓடும் ரெயிலில் இருந்து குதித்து வித்யா தற்கொலை செய்து கொண்டாரா? என்று சிவுவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women body found near railway trake in karnataga