ஐதராபாத் விமான நிலையத்தில் 400 கிலோ கஞ்சாவுடன் இளம்பெண் கைது.!!
women arrested for kidnape kanja in hydrabad airport
தெலுங்கான மாநிலத்தில் உள்ள ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாங்காங்கில் இருந்து துபாய் வழியாக வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் ஒரு பெண் பயணியை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரது உடமைகளை சோதனை செய்தனர். அந்த சோதனையில் அந்த பெண்ணின் 2 பைகளில் 400 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண்ணுக்கு தாய்லாந்திலும், இந்தியாவிலும் உள்ள கடத்தல் கும்பலுடன் இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
women arrested for kidnape kanja in hydrabad airport