மோடியின் காரை வழிமறித்த பெண் - அதிர்ச்சியில் பாதுகாப்பு அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. 

பாஜக சார்பில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடக்கும் "போராளி மிர்ஸா முண்டா ஜெயந்தி" விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென மோடியின் கார் முன்பாக நின்றுள்ளார்.

இதனை நொடியும் எதிர்பார்க்காத பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman stopped prime minister modi security vehicle


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->