மனைவியின் 'வாட்ஸ்அப்' டார்ச்சர்...! ஆபாசப் படங்களை அனுப்பி மிரட்டியதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு...!
Wife WhatsApp torture After being threatened sending pornographic images young man made bizarre decision
கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் அருகிலுள்ள தண்டேலி பகுதியைச் சேர்ந்த ராகவேந்திர வடகர் (37), திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர், ஒரு வாரத்திற்கு முன்புதான் சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார்.

ஆனால், வீடு திரும்பிய சில நாட்களிலேயே குடும்ப வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டது. ராகவேந்திர வடகருடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவி, இரு குழந்தைகளையும் அழைத்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். குடும்பத்தை மீண்டும் இணைக்க முயன்ற ராகவேந்திர, மனைவியை பலமுறை சமாதானப்படுத்த முயன்றும் பலன் அளிக்கவில்லை.
இதற்கிடையில், தனது மனைவி வேறு ஆண்களுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை தனது வாட்ஸ்-அப் நிலை பதிவாக வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதை கண்டு மனஅழுத்தமடைந்த ராகவேந்திர வடகர் கேள்வி எழுப்பியபோது, தன்னுடன் வாழ முடியாது எனத் தெளிவாக மறுத்ததுடன், அவமதிக்கும் வகையில் பேசியும் மனரீதியாக துன்புறுத்தியும் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பலருடன் தொடர்பில் இருப்பதாக வெளிப்படையாக கூறியதும், தன்னை விட்டு விலகி செல்லும்படி கூறியதும் ராகவேந்திரனை ஆழ்ந்த மனவேதனையில் ஆழ்த்தியது. இந்த நிலையில், தாங்க முடியாத மனக்குழப்பத்தில் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்து, தனது கை நரம்பை அறுத்துக் கொண்டார்.
அதனை புகைப்படமாக எடுத்து மனைவிக்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதற்கும் பொருட்படுத்தாமல், அவர் உயிரிழந்தாலும் கவலை இல்லை என மனைவி பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் முற்றிலும் மனம் உடைந்த ராகவேந்திர வடகர், இறுதியில் தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தண்டேலி காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், அவர் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், குடும்ப வாழ்க்கை முறிந்ததாலும், மனைவியின் நடத்தை மற்றும் மனரீதியான துன்புறுத்தலால் தற்கொலை செய்யத் தள்ளப்பட்டதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப உறவுகளில் ஏற்பட்ட மனஅழுத்தம் இளைஞரின் உயிரைப் பலிகொண்ட இந்த துயரச் சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Wife WhatsApp torture After being threatened sending pornographic images young man made bizarre decision