செல்போன் தர மறுத்த கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி.!!
wife kill husband in jarkhant
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்தரா மாவட்டம் மிஹிஜாம் பகுதியை சேர்ந்தவர்கள் மகாவீர் - காஜல் தேவி தம்பதியினர். இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், காஜல் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது மகாவீரிடம் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். மேலும், செலவு செய்ய பணம் தருமாறும் கேட்டுள்ளார். இதற்கு மகாவீர் மறுத்துவிட்டார்.
இதனால், தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த காஜல் வீட்டில் இருந்த கத்தியால் கணவன் மகாவீரை சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மகாவீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று மகாவீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் காஜலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
wife kill husband in jarkhant