கணவனுக்கு கள்ளத்தொடர்பு, மர்ம உறுப்பில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி.! அலறித்துடித்த கணவன்.!  - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் யஷ்வந்தப்பூரில் கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த காரணத்தால், கொதிக்கும் எண்ணெயை கணவன் மீது ஊற்றி ஆத்திரத்தை வெளிப்படுத்தினார் அவருடைய மனைவி. இதன் காரணமாக அந்த கணவன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றார்.

கடந்த ஞாயிறு தினத்தன்று 40 வயதான மஞ்சுநாத்திற்கும் அவருடைய மனைவியான பத்மாவிற்கும் இடையே சண்டை நடந்துள்ளது. மஞ்சுநாத்துக்கு கள்ள தொடர்பு இருப்பதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப்பொழுது பூரி செய்ய கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் சட்டியை எடுத்து பத்மா தன்னுடைய கணவனின் முகத்திலும், நெஞ்சிலும் மற்றும் உடல் முழுவதும் ஊற்றி இருக்கின்றார், இதன் காரணமாக வலி தாங்க முடியாமல் மஞ்சுநாத் அலறித்துடித்துள்ளார்.

அவருடைய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மஞ்சுநாத் நிலையை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருவருக்கும் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகி இரு குழந்தைகள் இருக்கின்றது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WIFE ATTACK HUSBAND USING OIL


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal