சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு; அதேவேளை, வர்த்தக பற்றாக்குறையும் மிக அதிகரிப்பு..!
While India's exports to China have increased the trade deficit has also increased significantly
கடந்த ஆண்டு சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும், அதேவேளை, வர்த்தக பற்றாக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் சீனாவின் சுங்கத்துறை வருடாந்திர வர்த்தக தரவுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 155.62 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையில் இந்தியா 19.75 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 9.7 சதவீதம் அதிகமாகும்.

அத்துடன், சீனா இந்தியாவுக்கு 135.87 அமெரிக்க டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 12.8 சதவீதம் அதிகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியா- சீனா வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 116.12 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும், 2023-க்குப் பிறகு 02-வது முறையாக வர்த்தக 100 பில்லியன் டாலருக்கு மேல் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024-இல் வர்த்தக பற்றாக்குறை 99.21 பில்லியன் டாலராக இருந்தது. சீனா 113.45 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்த நிலையில், இந்தியா 14.24 பில்லியனுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.
English Summary
While India's exports to China have increased the trade deficit has also increased significantly