இந்திய வரைபடத்தை தவறாக பதிவிட்ட வாட்ஸ்ஆப் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


2023 ஆங்கில புத்தாண்டையொட்டி வாட்ஸ்அப் நிறுவனம் தங்களுடைய அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த உலக வரைபடத்தில் இந்தியாவில் உள்ள பகுதியில் ஜம்மு-காஷ்மீரின் எல்லைக்கோடு தவறாக இருந்தது. 

இதை குறிப்பிட்டு மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் ட்விட்டரில் பத்தி பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியாவின் தவறான வரைபடம் இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ளது. 

இதனை உடனடியாக வாட்ஸ்ஆப் நிறுவனம் சரி செய்ய வேண்டும். இந்தியாவில் வா்த்தகத்தை தொடர வேண்டுமென்றால் இந்தியாவின் வரைபடத்தை சரி செய்ய வேண்டும்" என்றுத் தெரிவித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து, அந்த வீடியோவை உடனடியாக நீக்கிய வாட்ஸ்அப் நிறுவனம், எங்களின் எதிா்பாராத தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வீடியோ நீக்கப்பட்டுள்ளது. தவறு நடந்ததற்கு மன்னிக்கவும், வரும் நாள்களில் கவனத்துடன் செயல்படுவோம்" என்று பதில் பதிவு வெளியிட்டிருந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatsapp company remove post incorrect indian map


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->