அரசு பேருந்துகளில் வாட்சப் மூலம் பயணசீட்டு.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் அரசுப் பேருந்துகளில் பயணிக்க டிஜிட்டல் முறையில் டிக்கெட் பெறும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக குருகிராம் ராபிட் மெட்ரோ உள்ளிட்ட இதர மெட்ரோ ரயில் சேவையிலும் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெற, பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப்பிலிருந்து ‘Hi' என டைப் செய்து 91 9650855800 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு வரும் நடைமுறைகளை பின்பற்றி டிக்கெட் பெறலாம்.

அதுமட்டுமல்லாமல், பயணிகள் தங்களது ஸ்மார்ட்போனில் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அதன்மூலம் டிக்கெட் பெறலாம். வாட்ஸ் அப் மூலம் பெறும் டிக்கெட்டை கேன்சல் செய்ய இயலாது. மேலும் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி டிக்கெட் கட்டணம் செலுத்தினால் அதற்கு குறி்ப்பிட்ட கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால் யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தினால் எந்த விதமான கூடுதல் கட்டணமும் கிடையாது. இந்த நிலையில், டெல்லியில் மெட்ரோ ரயிலில் உள்ளது போல், அரசுப் பேருந்துகளிலும் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதிகளை நடைமுறைப்படுத்தும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

whatsapp based bus ticket system launch in delhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->