விமானப்படை அதிகாரி ரஃபேல் விமானம் குறித்து பதில் அளித்தது என்ன? - Seithipunal
Seithipunal


இந்திய விமானப்படை அதிகாரி ஏ.கே.பாரதி, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி நேற்று விளக்கம் அளித்தார்.அப்போது ''ஆப்ரேசன் சிந்தூர்'' நடவடிக்கையின் போது 'ரஃபேல் விமானம்' உட்பட ஏதேனும் தளங்களை இந்தியா இழந்ததா? என்று ஏ.கே.பாரதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஏ.கே.பாரதி:

அதற்கு பதிலளித்த அவர் தெரிவித்ததாவது, "நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அவர்களின் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது இலக்கை நாம் அடைந்துவிட்டோமா? என்பது தான். அதற்கான பதில் ஆம். இழப்புகள் என்பது போரின் ஒரு பகுதியாகும்.

நாம் இன்னும் போர் சூழ்நிலையில் இருப்பதால், நாம் இழந்தது குறித்து நான் ஏதாவது கருத்து தெரிவித்தால், அது எதிரிக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.நாங்கள் குறிவைத்த இலக்குகளை அடைந்துவிட்டோம், எங்கள் அனைத்து விமானிகளும் வீடு திரும்பிவிட்டனர் என்பதை மட்டுமே நான் சொல்ல முடியும்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 3 ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட 5 இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What was Air Force officer response regarding Rafale aircraft


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->